
பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல
நம்மை அரவணைத்த நம் கல்லூரி விடுதி
முதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்
நம்மை Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்
நம்மை கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden
பரீட்சைக்கு முந்தைய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரட்டை அரங்கங்கள்
வெட்டிக் கதைகளும் இணைய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்
கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் ‘சின்னஞ்சிறு’ விடுமுறைகள்
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்
எப்போதுமே கடைசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்
நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத
நம்மை அதிர வைத்த Anna University Result-கள்
நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்
தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் ‘maintain’ செய்த Punctuality
ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கடைசியில்
ஒற்றுமையாக நாம் நடத்திய Symposium
கஜினி முகமது போல வேலைக்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறப்போகும் Company-கள்
மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து ‘வாங்கிய’ Project-கள்
போருக்கு வியூகம் அமைப்பது போல்
அமைத்து நாம் அடித்த Mass Bunk-கள்
உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வட இந்திய சுற்றுலா
Arrear உறுதியானாலும் தன்னம்பிக்கையோடு
நாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது
போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது.